வியாழன், 30 நவம்பர், 2017

அருள் மிகு மார்கபந்தேச்வரர் திருக்கோவில், திருவிரிஞ்சிபுரம்

அருள் மிகு மார்கபந்தேச்வரர் திருக்கோவில், திருவிரிஞ்சிபுரம் தரிசனம்.
ஸ்தல வரலாறு:
திருவண்ணாமலையில் பிரம்மன் ஈசனின் அடிமுடிக் காண முயற்சித்து தோல்விக்கண்டார். பிரம்மா ஈசனின் திருமுடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனின் முடியைக் கண்டதாக போய் கூற, ஈசன் அவரை தேவ ருபத்தில் காட்சி அளிக்கக் கூடாது எனவும் விரிஞ்சிபுரத்தில் மார்கபந்தேச்வரருக்கு பூஜை செய்யும் சிவநாதன் என்பவருக்கு பாலகனாய் சிவசர்மன் என அவதரிக்க செ
சிவசர்மனின் தந்தை சிறிது காலத்தில் காலமாகி விட சிவசர்மனுக்கு உபநயம், சில தீட்ஷை செய்வித்து தன பாகப்படி பூஜை செய்ய உதவுமாறு தன் தான  தாயாதிகளை அவன் தாயார்  வேண்டினாள். அவர்கள் செவி மடுக்காமல் அவன் உரிமையையும் காணியாட்ச்சியையும் அபகரிக்க எண்ணி அச்சிறுவனை ஒரு நாள் வழிமறித்து நாளை உனது பூசை முறை வருவதால், உனது உரிமை தொழிலை செய்ய வேண்டும் என்றனர்.
இச்செய்தி அறிந்த தாய், மார்கபந்தீச்வரிரிடம் கண்ணீர் மல்கி முறையிட்டு வீடு அடைந்தனர். அன்று கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு முன் நாள் சனிக்கிழமை இரவு ஈசன் அவள் கனவில் தோன்றி, நாளைக் காலை பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை மங்கள நீராட்டி வை எனக் கூறி மறைந்தார். அவ்வாறே பரமனார் ஒரு கிழவர் போல வந்து பாலகனை தீர்த்தத்தில் மூழ்கி, பாலகனுக்கு உபநயம், பிரம்மோபதேசம், சிவ தீட்ஷை யாவும் அருள செய்து, கரையிலேயே மகாலிங்கமாக மறைந்தார். பலரும் வியக்கும் வண்ணம் பாலகனை யானை மீது ஏற்றி திரு மஞ்சன குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து கோவிலின் மீது நிறுத்தி பூட்டப்பட்ட கதவுகள் தாமாக திறந்துக் கொண்டன.
சிவசர்மன் அனைத்தும் கற்றுணர்ந்து பழகியவன் போல ஆகம விதி படி சுவர்ண கணபதி ஆராதித்து பகவானுக்கு தீர்த்தாபிஷேகம் செய்ய எத்தனிக்கையில், மகாலிங்கம் உயரமாக இருந்ததினால் எந்தையே  எனக்கு எட்ட வில்லை நும்முடி என்றான். அன்று திரு அண்ணாமலையாரிடம் முடி கண்டதாக  போய் கூறி சாபம் பெற்றான். இன்று ஈசனின்  முடி எட்டவில்லை என உண்மையை ஒப்புக் கொண்டதால் சாப விமோசனம் அளித்து தம் திருமுடி வளைத்தார். இன்று இதே கோலத்தில் திரு முடி சாய்த்தவாறு ஸ்ரீ மார்க்க பந்தீச்வரர் அருள் பாலிக்கிறார். இத்தினம் கார்த்திகை கடை ஞாயிறு விழாவாக  கொண்டாடப்படுகின்றது.
குறிப்பு:
1, சிவ லிங்கம் சாய்ந்தவாறு இருப்பது அவ்வளவாக  புலப்படவில்லை. படத்தில் காண்க.
2, இந்தக் கோவில் 1300 வாருங்கள் பழமை வாய்ந்தது.

3, சென்னை – பங்களூரு நெடுஞ்சாலையில் வேலூருக்கருகில் உள்ளது இத்தலம். வேலூரிலிருந்து 14 கிமீயில் சேதுவலை ஜங்ஷனில் சேவை வீதியில் சென்று வலதுபுறம் திரும்பி 2 கிமீ சென்றால் திருவிரிஞ்சிபுரத்தை அடையலாம்.
4,  வேதாரண்யம் விளக்கு அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதிலழகு என எதுகை மோனையுடன் சொல்லப்படும் சொல்லாடல் இங்கே திருவிரிஞ்சிபுரம் மதிலழகு என கையாடல்  செய்திருக்கிறார்கள். இது சமீபத்தில் தோன்றிய எண்ணமாக இருக்கலாம். (எங்கும் காப்பி அண்டு பேஸ்ட்டு தான் போல)
5, சிம்மத் துவாரம் கொண்ட கிணறு உள்ளது. இதுவே ஸ்ரீ ஆதி சங்கரரால் பீஜாக்ஷரப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிம்ம தீர்த்தம். படத்தில் சிங்க முகத்துடன் காணப்படும் வாயில். வருடத்தில் ஒரு முறை, கார்த்திகை கடைசி ஞாயிரு மட்டுமே  திறக்கப்படும் இந்த தீர்த்தத்தில் முழுகி எழுந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. நிச்சயம் அன்று நல்ல கூட்டம் இருக்கும். மிக சிறிய குளம். ஒரு பெரிய கிணறு எனலாம். அன்று ஒரு நாள் மட்டும் எத்தனை ஆயிரம் பேர் குளிப்பார்கள்? எந்த அளவுக்கு சுகாதாரம் இருக்கும் என்பதெல்லாம் உங்கள் ஊகத்துக்கு.
(மகப்பேறு தரும் சிம்மத்தீர்த்தம் :
பிரமாண்ட சிங்க உருவத்தின் வாய் வழியே, நுழைந்து செல்லும் விதத்தில் எழிலான சிம்மத் தீர்த்தம் அமைந்துள்ளது. மகப்பேறு வேண்டுவோர், கார்த்திகை கடை ஞாயிறு அன்று காலையில் பாலாற்றிலும், அடுத்து பிரம்மத் தீர்த்தத்திலும், நிறைவாக சிம்மத் தீர்த்தத்திலும் நீராடுவார்கள். பின்னர் ஈரத் துணியோடு சுவாமி எதிரே உள்ள மண்டபத்தில் பூ, தேங்காய், பழங்களைத் தட்டில் வைத்து, கவிழ்ந்து படுத்து உறங்குவார்கள். அப்போது கனவில் சுவாமி வந்து காட்சி தந்தால், அந்தப் பெண்ணுக்கு மகப்பேறு உறுதி என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *** அவர்களுக்கு ஜனனி வருவது மட்டும் நிச்சயம்.)
6, இந்த ஸ்தலத்தின் ஸ்தல மரம் பனையாகும். அதுவும் பெண் பனை என்கிறார்கள். வேறே எங்கும் பனை மரம்  ஸ்தல விருஷமாக கேள்வி பட்டதில்லை. படத்தில் காண்க.
7, காலம் காட்டும் கல்:-
இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:
கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம். படத்தில் காண்க.
6, மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.740–778), பரகேசரி வர்மன் (கி.பி.910–957), இரண்டாம் ராஜேந்திரன் (கி.பி.1057), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1209–1211), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1225–1260), விஜயகண்ட கோபால தேவன் (கி.பி.1267), இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1275), குலசேகர மாறவர்மன் (கி.பி.1293), வீரபாண்டியதேவன் (கி.பி.1308–1310), அழகிய சோழ சம்புவராயன், ஏகாம்பர குலசேகர சம்புவராயன், முதலாம் மற்றும் மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயன், அச்சுதராயன், தேவராயன், கிருஷ்ணதேவராயன் என பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்து போற்றி வணங்கிய திருக்கோவில் என்பதை கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மனின் ஒன்பதாம் ஆட்சியாண்டு (கி.பி.719) இங்கு காணப்படுவதால், இத்திருக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. சோழர் காலத்தில் சோமீஸ்வர மகாதேவர் கோவில் என்றும், சம்புவராயர் காலத்தில் வழித்துணை நாயனார் கோவில் என்றும், விஜய நகர மன்னன் காலத்தில் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மூலம் நிலக்கொடை, தானம், விளக்கெரிக்க கொடை, ஆலயத்திருப்பணி, வரதட்சணைக்குத் தடை எனப் பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.
விரிஞ்சை என்பது பிரம்மாவைக் குறிக்கும் சொல்லாகும். பிரம்மா இவ்வாலய அர்ச்சகருக்கு மகனாகப் பிறந்தார். சிவசருமன் என்னும் பெயரில் வளர்ந்து வந்த அவர், இத்தல சிவனை வழிபட்டார். இதனால் பிரம்மாவின் பெயராலேயே இத்தலம் விரிஞ்சிபுரம் எனப் பெயர் பெற்றது.
சோழர் காலத்தில் இருஞ்சுரம், கங்க மார்த்தண்ட புரம் என்றும், சம்புவராயர் காலத்தில் விரிஞ்சுரம் என்றும், விஜயநகர மன்னன் காலத்தில் விரிஞ்சிபுரம் என்றும் அழைக்கப்பட்டன. இதுபோல, மைசூர் குந்தளாபுரியைச் சார்ந்த தனபாலன் என்னும் மிளகு வணிகருக்கு எந்த இடையூறும் வராமல், காஞ்சீபுரம் வரை வழித்துணையாக இறைவன் சென்று வந்ததால் இறைவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.