இராமாயண கதாநாயகன் ஸ்ரீராமனின் இறுதிக் காலம்.
அவர் இந்த பூமியிலிருந்து மறைந்தது.
அவர் இறந்து போனாரா?
விஷ்ணுவின் அவதாரங்கள் இறந்து போனதாக குறிப்பிடப் படுவதில்லை. இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை ஸ்தாபித்த பின்பு அனைத்து அவதாரங்களும் வைகுண்டம் மீளுவதாக ஐதீகம்.
ஸ்ரீராமரும் சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போவதாகவே பத்ம புராணம் தெரிவிக்கிறது.
ஸ்ரீராமரின் குழந்தைகளும் அவரது மற்றைய தம்பிகளின் குழந்தைகளும் ஸ்ரீராமரின் அகண்ட பெரிய நாட்டின் பல பகுதிகளாக பிரித்து ஆண்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராமர் நாட்டு மக்களின் நன்மைக்காக இறைவனை நோக்கி பல யாகங்களை செய்தார்.
ஒரு நாள்...
ஸ்ரீராமரை தேடிக் கொண்டு ஒரு முனிவர் வந்தார்.
அவர் ராமருடன் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் எனவும், இடையில் யாரும் தங்களது தனி அறைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் உத்திரவிட்டார்.
அவர்தான் காலதேவர் எனப்படும் காலன்.
அதன்படி ராமர் அவரது தம்பி லக்ஷ்மணனை காவலாக வைத்துவிட்டு காலதேவரை பின்தொடர்ந்தார்.
யாராவது அப்படி அத்து மீறி நுழைந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
காலதேவர் ராமரை சந்தித்து அவரது அவதாரத்தின் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும் அவர், வைகுண்டம் மீளும் காலம் வந்துவிட்டதாகவும் தான் அதை ஸ்ரீராமருக்கு ஞாபகப் படுத்த வந்ததாகவும் கூறனார்.
இப்படியாக ஸ்ரீராமரும் காலதேவரும் பேசிக் கொண்டிருக்கையில் அறைக்கு
வெளியில் ஸ்ரீ ராமரை தாம் உடனடியாக பார்க்கவேண்டும் என்று லக்ஷ்மனுடன் மல்லாடிக் கொண்டிருந்தார் நமது கடும் கோபக்கார துர்வாச முனுவர்.லக்ஷ்மணன் எவ்வளவு மன்றாடியும் அவர் அசரவில்லை. ஸ்ரீராமரை பார்ப்பதில் அடமாக நின்றார் நமது துர்வாச முனிவர்.
உள்ளே தன்னை விடவில்லையானால் முனிவர், லக்ஷ்மணனுக்கு சாபம் அளிப்பேன் என்று சொன்னதால் லக்ஷ்மணன் ஒன்றும் செய்வதறியாமல்
குழப்பம் அடைந்தார்.
உள்ளே போனாலோ ஸ்ரீராமர் சொன்னது போல நமக்கு சாவு நிச்சயம். இவரை உள்ளே விடவில்லை என்றால் சாபம் நிச்சயம் என்ற நிலையில் லக்ஷ்மணனுக்கு இறைவனின் சித்தம் புரிந்தது.
இது காலனின் விளையாட்டு. நாம் இந்த பூவுலகத்திலிருந்து விடை பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதை முழுமையாக புரிந்துக் கொண்டார்.
காலனின் விருப்பதிற்கேற்ப தன்னிச்சையாக சரயு நதிக்குள் புகுந்து ஆனந்த சேஷ சயனம் எடுத்துக் கொண்டார்.
லக்ஷ்மணன் முடிவை தெரிந்துக்கொண்ட ஸ்ரீராமர், தனக்கும் காலன் அழைத்ததை ஏற்றுக் கொண்டு தனது இந்த அவதாரம் முடிந்தது என புரிந்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி லக்ஷ்மணனை தொடர்ந்து சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போனார்.ஸ்ரீஹரி விஷ்ணு அனந்த சேஷனத்தில் பள்ளிக் கொண்ட படி அங்கு எல்லோருக்கும் காட்சி தந்து பக்தர்களுக்கு ஆசியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக