செவ்வாய், 12 டிசம்பர், 2017

திரௌபதி... இது பேஸ்புக் மீள்...


திரௌபதி...
அகினிக்கும், ஸ்வாஹாவுக்கும் பிறந்த அக்னிஜோஸ்த்னா துருபாத் என்ற மன்னனால் எடுத்து வளர்க்கப்பட்டதால் திரௌபதி என ஆனாள். யஜ்ன சேனி, பாஞ்சாலி, துருபாத் கன்யா என்றெல்லாம் அழைக்கப்படும் திரௌபதி, பல அறிஞர்கள் கருத்துப்படி ஒரு கருப்பு அழகி.. (அக்னியிலிருந்து வந்ததால்...). அவளது உடலில் தோன்றும் நறுமணம் ஒரு யோஜனை தூரம் (பழைய அளவீடு) வரை மணக்கும் என்று எழுதுகிறார்கள். 
அவளுக்கு வயதாவதே இல்லை என்பதால், நித்ய யுவானி, நித்தயுவானி என்றும் அழைக்கப்படுகிறாள்.
அவளின் சுயம்வரத்தின் போது பல அரசர்கள் லஞ்ஜம் கொடுத்து சிலரை அந்த சுயம்வரத்தில் கலந்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பாண்டவர் ஐவரையும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட திரௌபதி, ஒரு கண்டிஷன் மட்டும் போட்டிருக்கிறாள். பாண்டவர்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளட்டும். ஆனால் அரியனை ஏறும் உரிமை உள்ள ஒரே ராணி நானாகத்தான் இருக்க வேண்டும் என்பதே அது. ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அது சரி.. எப்படி அவள் ஐந்து கணவர்களை சமாளித்தாள்?
வருடம் ஒருவர் அவள் கணவனாக வாழலாம். அந்த நேரத்தில் மற்ற நான்கு பாண்டவர்களுக்கும் அவள் ஒரு அன்னையாகதான் தெரிய வேண்டும் என்பதே ஒப்பந்தம். ஒரு வருட முடிவில், அவள் ஒரு சிதை மூட்டி அதில் நிற்பதும்.. சிறிது நேரத்தில் அவள் தனது இழந்த கன்னித்தன்மையை திரும்ப பெற்று அடுத்த கணவனுக்கு ஒரு வருடம் மனைவியாகவும் வாழ்ந்து வந்ததாக கூறுவர். அதனாலே அவள் நித்யகன்யா எனவும் அழைக்கப்பெற்றாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக